Tuesday, June 3, 2014

அடடே இப்படியுமா | தெரியுமா உங்களுக்கு ?


யாராலும் கண்களைத் திறந்து கொண்டு தும்மவும் முடியாது, தூங்கவும் முடியாது.

பன்றிகள் தலை நிமிர்ந்து ஆகாயத்தைப் பார்க்க முடியாது.

யானையால் துள்ளிக் குதிக்க முடியாது.

முதலைகளால் அதன் நாக்குகளை வெளியே நீட்டி இரைகளை பற்ற முடியாது.

தட்டான் பூச்சிகளைப் பார்த்திருக்கிறீர்களா. அவற்றிற்கு ஒரு அதிசயம் உண்டு. என்னவென்றுத் தெரியுமா அவை பறந்தாலும் சரி, நின்றாலும் சரி அதனால் இறக்கையை மடக்கி வைக்க முடியாது.

முதலைகளும், திமிங்கலங்களும் நீரில் வாழ்ந்தாலும் அவற்றால் நீருக்குள் மூச்சு விட முடியாது.

Sunday, May 19, 2013

40 டிகிரி வெப்பத்தில்...! | உங்களுக்கு தெரியுமா..?

 • வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர்வராது..
 • குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்..
 • புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.
 • ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?)
 • சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.
 • தர்பூசணி, தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.
 • கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும்.
 • 8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.
 • சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.
 • இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.
 • திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்.
 • கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.
 • எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்.
 • 40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழ்ப்பான்.
 • சுவீடனில், ஒரு ஹோட்டல், ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும் மீண்டும் கட்டப்படும்.
 • பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டக சிவிங்கி மிருகங்கள் தான், வலது, வலது, இடது, இடது என நடக்கும், மற்றவையெல்லாம் வலது, இடது என நடக்கும்.
 • வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.
 • பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.
 • நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும்.
 • மனித மூளை, 11 வகை இராசாயணத்தை அமைதி படுத்த அனுப்புகிறது.
 • லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.
 • 15 எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable
 • குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6 வயதில் தான் வளர்கிறது.
 • எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் மூக்கு கண்ணாடி அணிவார்கள்.
 • வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.
 • சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.
 • கண்களை கசக்கும் போது தோன்றும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ் எனப்படும்.
 --------
நண்பர் : “என்ன பண்ணிட்டிருக்க ஜோ?”
ஜோ : “எங்க அப்பாவுக்கு லெட்டர் எழுதிக்கிட்டு இருக்கேன்”
நண்பர் : “அதுக்கு ஏன் இவ்வளவு மெதுவா எழுதற?”
ஜோ : “அவரால வேகமாக படிக்க முடியாது. அதனால்தான் மெதுவா எழுதறேன்”

Wednesday, April 18, 2012

உலகில் முதன் முதலாகக் கண் வங்கியை ஏற்படுத்திய நாடு?

 1. கடல் மட்டத்திற்கு கீழேயுள்ள நாடு - டென்மார்க். 
 2. ஒவ்வொரு தனி ராஜ்யத்திற்கும் தனி அரசியல் சட்டம் உள்ள நாடு -அமெரிக்கா. 
 3. ஆறு குடியரசுகள் சேர்ந்த நாடு - யுகோஸ்லேவியா.
 4. நிக்கல் அதிகம் கிடைக்கும் நாடு - கனடா.
 5. முக்கால் மைல் நீளம் மட்டுமே கொண்ட ரயில்வே உள்ள நாடு - வாடிகன்.
 6. உலகில் முதன் முதலாக மருத்துவமனை ஏற்படுத்திய நாடு - ரோம்.
 7. பைசா கோபுரம் உள்ள நாடு - இத்தாலி.
 8. ஐரோப்பாக் கண்டத்தின் மிகப் பெரிய நாடு - ரஷ்யா.
 9. உயரமான நீர்வீழ்ச்சிகளை அதிகமாகக் கொண்ட நாடு - நார்வே
 10. பட்டுத்துணி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு - ஜப்பான்.
 11. வாசனைத் தபால்தலையை முதன்முதலில் வெளியிட்ட நாடு - தென்னாப்பிரிக்கா.
 12. உலகில் திரையரங்குகள் இல்லாத நாடு - சவூதி அரேபியா.
 13. 7083 தீவுகளைக் கொண்ட நாடு - பிலிப்பைன்ஸ்.
 14. ராணுவமே காவல்துறைப் பணியை மேற்கொள்ளும் நாடு - பூடான்.
 15. குற்றவாளிகள் பற்றிய விவரங்களை புத்தகத்திலும் பத்திரிகைகளிலும் வெளியிடாத நாடு - ஆப்கானிஸ்தான்.
 16. உலகிலேயே பூக்கள் அதிகமாக விளையும் நாடு - நெதர்லாந்து.
 17. ஆசிரியர் பயிற்சிக்கான கல்லூரியை தொடங்கிய முதல் நாடு - இங்கிலாந்து.
 18. கேசோஹால் எனும் வாகன எரிபொருளை கரும்பிலிருந்து அதிகம் உற்பத்தி செய்யும் நாடு - பிரேசில்.
 19. தனித்திருக்கும் கொள்கையைக் கடைப்பிடிக்கும் நாடு - சீனா.
 20. முத்துத்தீவு என்று அழைக்கப்படும் நாடு -பக்ரைன்.
 21. உலகில் மிக நீளமான (128 வரிகள்) தேசீய கீதம் கொண்ட நாடு - கிரேக்கம்.
 22. உலகில் மிகக் குறைவான (4 வரிகள்) தேசீய கீதம் கொண்ட நாடு - ஜப்பான்.
 23. தபால் தலையை வட்ட வடிவமாக வெளியிட்டுள்ள நாடு - மலேசியா.
 24. உலகின் மிக உயரமான கலங்கரை விளக்கம் கொண்ட நாடு - ஹாலந்து.
 25. துப்பாக்கியைத் தேசியக் கொடியின் அடையாளமாக வைத்திருக்கும் நாடு - மொஸாம்பிக்.
 26. உலகில் முதன் முதலாகக் கண் வங்கியை ஏற்படுத்திய நாடு - இலங்கை.
 27. ஓரினச் சேர்க்கை திருமணத்தை முதன் முதலாக அனுமதித்த நாடு - டென்மார்க்.
 28. வருடத்திற்கு ஒரு முறை அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நாடு - சுவிட்சர்லாந்து.

Monday, October 4, 2010

அறிந்து கொள்வோம் - பாபு நடேசன்

* பொது அறிவுக் கூடக்கூட ,நீங்கள் கனவு காணும் திறன் அதிகரிக்கிறது
* மனிதர்களுக்கு சராசரியாக கனவு 2 முதல் 3 நொடிகளுக்கே நீடிக்கிறது ..

* நாம் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு 200 தசைகளைப் பயன் படுத்துகிறோம் ..

* சராசரியாக பெண்கள் ஆண்களை விட 5 அங்குலம் உயரம் குறைவாக இருக்கிறார்கள்...

* உங்களின் கால் கட்டை விரலில் 2 எலும்புகள் இருக்கின்றன .மற்ற விரல்களில் 

  3 எலும்புகள் இருக்கின்றன..

* நமது மூளைச் செல்லால் 'என்சைக்லோபீடியா" போல 5 மடங்கு தகவல்களை சேமிக்க  

  முடியும் ...

* இரண்டு பாதங்களிலும் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன ....

* உங்கள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தினால் ஒரு "பிளேடை " கரைத்து விட முடியும் ...

* வாயில் இருந்து உணவு வயிற்றுக்குச் செல்ல 7 நொடிகள் ஆகும் ...

* நமது உடம்பு வெளியிடும் வெப்பத்தைக் கொண்டு 2 லிட்டர் தண்ணிரை 

  அரை மணி நேரத்தில் கொதிக்க வைக்க முடியும்.

* உங்கள் பல்லின் 'எனாமல்' தான் உடம்பிலே கடினமான பொருளாகும் ....

* உங்களின் கட்டைவிரலும் மூக்கும் ஒரே நீளமாக இருக்கும் .......


இன்றைய தத்துவம்


வகுப்பறை என்பது ரயில் மாதிரி
முதல் இரண்டு பெஞ்ச் வீ ஐ பீ (VIP)
நடுவில் இரண்டு பெஞ்ச் பொது (GENERAL) கடைசி இரண்டு தூங்கும் பெஞ்ச் (SLEEPER)

 

Sunday, September 26, 2010


இன்றைய தத்துவம்

 

பயம் தான் தோல்விக்கு முக்கிய காரணம்.....
அதனால இனிமேல் கண்ணாடிய பார்க்காதீங்க.

Wednesday, September 22, 2010

ஆவின் பால்


'ஆவின் பால்' இன்று பலரால் உச்சரிக்கப்படும் வார்த்தை. அதில் "ஆவின்" என்பது ஆங்கில வார்த்தை என்றே பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அனால் ஆவின் என்பது சுத்தமான தமிழ் வார்த்தை என்று உங்களுக்கு தெரியுமா?
தமிழ் மொழியில் ஒரேழுத்து வார்த்தைகள் என்று ஒரு வகை உண்டு. என்றால் பசு. ஆ-வின் பால் என்றால் பசுவின் பால் என்று அர்த்தம்.

வலையில் சிக்கியது - பொது அறிவுக்காக உங்கள் பாபு நடேசன்  


இன்றைய தத்துவம்


விட்டு கொடுப்பது மட்டும் நட்பல்ல - பரிட்சையில்
'பிட்'டும் கொடுப்பதே நட்பு

தெரியுமா! - உங்கள் பாபு நடேசன்

- பூமிக்கும், சூரியனுக்கும் உள்ள தூரம் 150 மில்லியன் கிலோ மீட்டர் (1 மில்லியன் என்பது 10 இலட்சம்) இந்த தூரத்தை ஒரு மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் செல்லும் ஒரு ஜெட் விமானத்தில் நிற்காமல் பயணித்தால் பதினேழு வருடங்களில் கடக்கலாம்.

- ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்குக்கூட கைரேகைகள் ஒரே மாதிரி இருக்காது.


- கபில்தேவ் நடத்தும் ஓட்டலின் பெயர் ஹோட்டல் சிக்ஸர்.

- ஆப்கானியப் பெண்களுக்காக சமீபத்தில்தான் ஒரு பத்திரிக்கை துவங்கப்பட்டது அதன் பெயர்: ரோஜ் (நாள்).

- டைப்ரைட்டர் Keyboard-ல் ஒரே ஒரு வரிசையில் உள்ள எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தி தட்டச்சு செய்யக்கூடிய பெரிய வார்த்தை Type Writer.

- நவீன விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் தூய்மைப்படுத்தப்பட்ட கெரஸின்தான்.

- டெட்-ஸீ (Dead Sea)யில் உள்ள உப்பு சதவிகிதம் மிக அதிகம். அதில் குதித்தால் முழ்க மாட்டோம்.

- மலரின் வாசனைக்குக் காரணம் அதன் இதழ்களிலுள்ள எண்ணெய்ச் சத்துக்கள் தான்.

- ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறையும் போது பசி ஏற்படும்.

- லிபியா பாலைவனத்தில் நிழலிலேயே 1360 பாரன்ஹீட் வெப்பம் இருக்கும்.

- அமெரிக்க அதிபர்களில் MBA படிப்பு முடித்த முதல் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்.

- ஒரு யூனிட் இரத்தம் என்பது 350 மில்லிலிட்டர்.

- கரையான்களுக்கு கண்கள் கிடையாது. அதன் இரத்தத்தில் ஹீமோக்ளோபின் கிடையாது.

- விஞ்ஞானி ஜன்ஸ்டீனின் மூளையை பிரின்ஸ்டன் மருத்துவமனையில் ஆராங்ச்சிக்காய பாதுகாத்து வருகிறார்கள்.

- உலகின் மிகப்பெரிய பள்ளிக்கூடம் கல்கத்தாவில் உள்ள South Point High School.

- நிலவில் அதிகமாக காணப்படும் பொருள் டைட்டானியம்.

- சாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா பாடலை எழுதியவர் முகமது இக்பால்.

- இந்தியாவின் முதல் மிருகக்காட்சிசாலை 1855-ம் ஆண்டு சென்னையில் அமைக்கப்பட்டது.

- 90ரூபாய் (90 கியாத்) நோட்டு அச்சடிக்கும் ஒரே நாடு மியான்மிர் இங்கு 9 என்ற எண் மிகவும் புனிதமானது.

- பெங்களுர் இந்தியாவின் பூந்தோட்டம் என்று அழைக்கப்படுகிறது.

- ஆசியாவில் மட்டுமே சந்தன மரம் பயிராகிறது.

- ரத்தத்தைப் பரிசோதித்து அது ஆணின் ரத்தமா, பெண்ணின் ரத்தமா என்று சொல்ல முடியாது.

- பொருளாதாரத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர் ஆடம் ஸ்மித்.

- அரபிக்கடலின் ராணி என்று அழைக்கப்படும் நகரம் கொச்சி.

- தேனீக்கள் ஒரு லிட்டர் தேன் உருவாக்க பத்து இலட்சம் பூக்களிலிருந்து பூந்தேன் சேகரிக்க வேண்டும்.

- உப்பு நீரைக் குடிநீராக மாற்ற உதவும் வேதிப்பொருள் செலினியம்.

- பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் வாயு எத்திலீன்.

- ஜெர்மனியில் உள்ள வால்ஸ்வேகன் வெர்க் (Volkswagen work) உலகின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்புக்கூடம். ஒரு நாளைக்கு 4600 வாகனங்களைத் தயாரிக்க முடியும்.

- அக்வா ரிஜியா என்னும் திரவத்தில் தங்கம் கரையும்.

- தொடர்ந்து பலமணி நேரம் கம்ப்யூட்டரில் உட்கார்ந்திருந்தால் கைகளுக்கும் தோள்களுக்கும் வரும் நோயின் பெயர் கார்பல் டனல் சிண்ட்ரோம்.

- விஞ்ஞானம், தொழில்நுட்பத்தில் சாதனை புரிபவர்களுக்கு அளிக்கப்படும் விருது – பட்நாகர் விருது.

- மிகக்குறைந்த வயதில் பத்ம விருது பெற்றவர் (செஸ்) விஸ்வநாதம் ஆனந்த்

- ஐரோப்பாவைத் தவிர உலகின் எல்லாக் கண்டங்களின் பெயர்களும் Aல் ஆரம்பித்து Aல் முடியும்.

- இந்தியாவின் தலைநகரமான டில்லியின் பழைய பெயர் இந்திரப் பிரஸ்தம்
- கண்டமாகவும், நாடாகவும் இருப்பது ஆஸ்திரேலியா மட்டுமே.

- அணுக்கதிர் வீச்சால்கூட பாதிக்கப்படாத ஒரே உயிரினம் கரப்பான் பூச்சி.

வலையில் சிக்கியது - பொது அறிவுக்காக உங்கள் பாபு நடேசன்  

இன்றைய தத்துவம்
ஒருவர் உங்களை கல்லை கொண்டு எறிந்தால், நீங்கள் பூவை கொண்டு எறியுங்கள்...
மறுபடியும் கல்லை கொண்டு எறிந்தால், நீங்கள் பூ தொட்டிய கொண்டு எறியுங்கள்... கொய்யாலெ சாவட்டும்