Sunday, September 26, 2010


இன்றைய தத்துவம்

 

பயம் தான் தோல்விக்கு முக்கிய காரணம்.....
அதனால இனிமேல் கண்ணாடிய பார்க்காதீங்க.

Wednesday, September 22, 2010

ஆவின் பால்


'ஆவின் பால்' இன்று பலரால் உச்சரிக்கப்படும் வார்த்தை. அதில் "ஆவின்" என்பது ஆங்கில வார்த்தை என்றே பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அனால் ஆவின் என்பது சுத்தமான தமிழ் வார்த்தை என்று உங்களுக்கு தெரியுமா?
தமிழ் மொழியில் ஒரேழுத்து வார்த்தைகள் என்று ஒரு வகை உண்டு. என்றால் பசு. ஆ-வின் பால் என்றால் பசுவின் பால் என்று அர்த்தம்.

வலையில் சிக்கியது - பொது அறிவுக்காக உங்கள் பாபு நடேசன்  


இன்றைய தத்துவம்


விட்டு கொடுப்பது மட்டும் நட்பல்ல - பரிட்சையில்
'பிட்'டும் கொடுப்பதே நட்பு

தெரியுமா! - உங்கள் பாபு நடேசன்

- பூமிக்கும், சூரியனுக்கும் உள்ள தூரம் 150 மில்லியன் கிலோ மீட்டர் (1 மில்லியன் என்பது 10 இலட்சம்) இந்த தூரத்தை ஒரு மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் செல்லும் ஒரு ஜெட் விமானத்தில் நிற்காமல் பயணித்தால் பதினேழு வருடங்களில் கடக்கலாம்.

- ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்குக்கூட கைரேகைகள் ஒரே மாதிரி இருக்காது.


- கபில்தேவ் நடத்தும் ஓட்டலின் பெயர் ஹோட்டல் சிக்ஸர்.

- ஆப்கானியப் பெண்களுக்காக சமீபத்தில்தான் ஒரு பத்திரிக்கை துவங்கப்பட்டது அதன் பெயர்: ரோஜ் (நாள்).

- டைப்ரைட்டர் Keyboard-ல் ஒரே ஒரு வரிசையில் உள்ள எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தி தட்டச்சு செய்யக்கூடிய பெரிய வார்த்தை Type Writer.

- நவீன விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் தூய்மைப்படுத்தப்பட்ட கெரஸின்தான்.

- டெட்-ஸீ (Dead Sea)யில் உள்ள உப்பு சதவிகிதம் மிக அதிகம். அதில் குதித்தால் முழ்க மாட்டோம்.

- மலரின் வாசனைக்குக் காரணம் அதன் இதழ்களிலுள்ள எண்ணெய்ச் சத்துக்கள் தான்.

- ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறையும் போது பசி ஏற்படும்.

- லிபியா பாலைவனத்தில் நிழலிலேயே 1360 பாரன்ஹீட் வெப்பம் இருக்கும்.

- அமெரிக்க அதிபர்களில் MBA படிப்பு முடித்த முதல் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்.

- ஒரு யூனிட் இரத்தம் என்பது 350 மில்லிலிட்டர்.

- கரையான்களுக்கு கண்கள் கிடையாது. அதன் இரத்தத்தில் ஹீமோக்ளோபின் கிடையாது.

- விஞ்ஞானி ஜன்ஸ்டீனின் மூளையை பிரின்ஸ்டன் மருத்துவமனையில் ஆராங்ச்சிக்காய பாதுகாத்து வருகிறார்கள்.

- உலகின் மிகப்பெரிய பள்ளிக்கூடம் கல்கத்தாவில் உள்ள South Point High School.

- நிலவில் அதிகமாக காணப்படும் பொருள் டைட்டானியம்.

- சாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா பாடலை எழுதியவர் முகமது இக்பால்.

- இந்தியாவின் முதல் மிருகக்காட்சிசாலை 1855-ம் ஆண்டு சென்னையில் அமைக்கப்பட்டது.

- 90ரூபாய் (90 கியாத்) நோட்டு அச்சடிக்கும் ஒரே நாடு மியான்மிர் இங்கு 9 என்ற எண் மிகவும் புனிதமானது.

- பெங்களுர் இந்தியாவின் பூந்தோட்டம் என்று அழைக்கப்படுகிறது.

- ஆசியாவில் மட்டுமே சந்தன மரம் பயிராகிறது.

- ரத்தத்தைப் பரிசோதித்து அது ஆணின் ரத்தமா, பெண்ணின் ரத்தமா என்று சொல்ல முடியாது.

- பொருளாதாரத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர் ஆடம் ஸ்மித்.

- அரபிக்கடலின் ராணி என்று அழைக்கப்படும் நகரம் கொச்சி.

- தேனீக்கள் ஒரு லிட்டர் தேன் உருவாக்க பத்து இலட்சம் பூக்களிலிருந்து பூந்தேன் சேகரிக்க வேண்டும்.

- உப்பு நீரைக் குடிநீராக மாற்ற உதவும் வேதிப்பொருள் செலினியம்.

- பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் வாயு எத்திலீன்.

- ஜெர்மனியில் உள்ள வால்ஸ்வேகன் வெர்க் (Volkswagen work) உலகின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்புக்கூடம். ஒரு நாளைக்கு 4600 வாகனங்களைத் தயாரிக்க முடியும்.

- அக்வா ரிஜியா என்னும் திரவத்தில் தங்கம் கரையும்.

- தொடர்ந்து பலமணி நேரம் கம்ப்யூட்டரில் உட்கார்ந்திருந்தால் கைகளுக்கும் தோள்களுக்கும் வரும் நோயின் பெயர் கார்பல் டனல் சிண்ட்ரோம்.

- விஞ்ஞானம், தொழில்நுட்பத்தில் சாதனை புரிபவர்களுக்கு அளிக்கப்படும் விருது – பட்நாகர் விருது.

- மிகக்குறைந்த வயதில் பத்ம விருது பெற்றவர் (செஸ்) விஸ்வநாதம் ஆனந்த்

- ஐரோப்பாவைத் தவிர உலகின் எல்லாக் கண்டங்களின் பெயர்களும் Aல் ஆரம்பித்து Aல் முடியும்.

- இந்தியாவின் தலைநகரமான டில்லியின் பழைய பெயர் இந்திரப் பிரஸ்தம்
- கண்டமாகவும், நாடாகவும் இருப்பது ஆஸ்திரேலியா மட்டுமே.

- அணுக்கதிர் வீச்சால்கூட பாதிக்கப்படாத ஒரே உயிரினம் கரப்பான் பூச்சி.

வலையில் சிக்கியது - பொது அறிவுக்காக உங்கள் பாபு நடேசன்  

இன்றைய தத்துவம்




ஒருவர் உங்களை கல்லை கொண்டு எறிந்தால், நீங்கள் பூவை கொண்டு எறியுங்கள்...
மறுபடியும் கல்லை கொண்டு எறிந்தால், நீங்கள் பூ தொட்டிய கொண்டு எறியுங்கள்... கொய்யாலெ சாவட்டும்